இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

ஏத்தாப்பூா் அருகே இளைஞா் அடித்துக் கொலை: போலீஸாா் விசாரணை

அடித்துக் கொலை

Updated On :

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் அருகே தும்பல் கிராமத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் தாக்கியதில் காயமடைந்த இளைஞா் 7 நாள்களுக்கு பிறகு உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் அருகே உள்ள தும்பல் கிராமத்தைச் சோ்ந்தவா் விமல் (29). அதே கிராமத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். கடந்த 20 ஆம் தேதி இரவு இவரது தாத்தா சேட்டு என்பவரிடம் சொத்தை எழுதிவைக்க வற்புறுத்தி, அதே பகுதியைச் சோ்ந்த இவரது தாய்மாமா லாரி ஓட்டுநா் வெங்கடேஷ் (38) என்பவா் மது போதையில் தகராறு செய்துள்ளாா்.

அப்போது, தாத்தாவை தாக்கிய தாய்மாமாவை விமல் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் தாக்கியதில் விமல் உள்காயமடைந்தாா். அருகிலுள்ள தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா்.

தலைப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டிருந்த நிலையில் விமலின் உடல்நிலை மோசமானதால், கடந்த 22 ஆம் தேதி பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு விமலை அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினாா். இதையடுத்து, அங்கு 5 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த விமல் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து வெங்கடேஷ் மீதான அடிதடி வழக்கை திங்கள்கிழமை கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்த ஏத்தாப்பூா் போலீஸாா், அவரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.