ரயில்வே கணினி மையம் தொடர்ந்து செயல்படுமா?
போடி, டிச. 6: போடியில் அகலப் பாதைக்காக ரயில் நிறுத்தம் செய்யப்பட்டாலும், கணினி மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். போடியிலிருந்து மதுரை வரை 90


போடி, டிச. 6: போடியில் அகலப் பாதைக்காக ரயில் நிறுத்தம் செய்யப்பட்டாலும், கணினி மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போடியிலிருந்து மதுரை வரை 90 கிலோ மீட்டர் தூரம் மீட்டர்கேஜ் பாதையாக, ரயில் பாதை செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் கொடைக்கானல், டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஓய்வுக்காக வந்தபோது, இப் பகுதியில் விளைந்த ஏலக்காய், தேயிலை, காப்பி உள்ளிட்ட விவசாயப் பயிர்களை எடுத்துச் செல்ல ரயில் பாதை அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட ரயில், தற்போது டீசலில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் போடி ரயில் நிலையத்தில் கணினி மூலம் டிக்கெட் வழங்கும் மையமும் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் போடியிலிருந்து எந்த ஊருக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இருக்கைகள் குறித்த விவரம் தெரிந்து கொள்ளலாம்.
போடியிலிருந்து மதுரை வரை மட்டும் மீட்டர்கேஜ் ரயில் பாதையாகவும் அதன் பின் அகலப் பாதையாகும் உள்ள நிலையில், போடி-மதுரை ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏலக்காய் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். அகல ரயில் பாதையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமணி உள்ளிட்ட நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாயின.
சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு ஆம்னி பஸ்களை நம்பி கூடுதல் கட்டணம் செலுத்தி வரும் நிலையில், போடி ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றும்போது, போடியிலிருந்து சென்னை மற்றும் வட மாநில நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இந் நிலையில், போடி ரயில் பாதையை அகலப்படுத்துவதற்காக வருகிற 2011, ஜனவரி 1-ம் தேதி முதல் போடி-மதுரை ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவல், போடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், ரயில் நிறுத்தம் செய்யும்போது, கணினி மையத்தையும் மூடி விடுவார்கள் என்ற அச்சம் பொதுமக்கள், வர்த்தகர்களிடையை ஏற்பட்டுள்ளது. இதைப் போக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ந்து கணினி மையம் செயல்படும் என்பதை அறிவிக்க வேண்டும்.
மேலும், போடியிலிருந்து தினமும் சராசரியாக 200 மூட்டை ஏலக்காய் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் ரயில்வேக்கு நாளொன்றுக்கு ரூ. 50 ஆயிரமும், மாதம் ரூ. 15 லட்சமும் வருவாய் கிடைக்கிறது. அகலப் பாதைப் பணி நடைபெறும்போது ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வர்த்தகர்களும் பாதிக்கப்படுவர்.
இதனைத் தவிர்க்க, மாற்று ஏற்பாடாக போடியில் வழக்கம்போல் சரக்குகளைப் பதிவு செய்து, ரயில்வே லாரிகள் மூலம் மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து ரயில்களில் சரக்குகளை ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...