மாவட்ட துணை மருத்துவமனையாகக் கருதப்படும் இந்த மருத்துவமனையில் சுவாசக் கருவிகள், அவசர விபத்து சிகிச்சை, தீக்காய சிகிச்சை பிரிவு, தலைக்காயங்களை கண்காணிக்கும் சிகிச்சை பிரிவுகள் இல்லை. லேசான விபத்தில் காயமடைந்தவர்கள், விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்பவர்கள், லேசான தீக்காயம் அடைபவர்கள் கூட தேனி, மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிலையும் இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. அரசு இந்த மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.