திண்டுக்கல், நவ. 18: கார்த்திகை மாதம் தீபங்களின் திருநாள். தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கார்த்திகை பண்டிகையை தீபாவளி பண்டிகையின் தொடர்ச்சியானது என்றும் கூறுவர். கார்த்திகை திருநாள் அன்று வீடுகளைச் சுத்தம் செய்து வாசலில் கோலம் இட்டு, அந்தக் கோலத்தின் மத்தியிலும், சுற்றியும், ஜன்னல்கள், முற்றம் என வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் புது அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும்.
இதற்காக வருடந்தோறும் களிமண்ணால் செய்யப்படும் அகல் விளக்குகளை வாங்குவர். கார்த்திகைப் பண்டிகை இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இப் பண்டிகையை ஒட்டி திண்டுக்கல்லில் விதவிதமான விளக்குகள் செய்யப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் வேடபட்டியை அடுத்த சிவசக்தி நகரில் டெரகோட்டா பொம்மைகள் தயாரித்துவரும் கைவினைக் கலைஞர் கஜேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியது.
திண்டுக்கல் கலைவாணி களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவினர், சரஸ்வதி களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 40 பேரைக் கொண்டு கார்த்திகை பண்டிகைக்கான அகல் விளக்குகள் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு போன்ற பண்டிகைக் காலங்களுக்குத் தகுந்த வகையில் சிலைகள், பொம்மைகள், அகல் விளக்குகளைத் தயாரித்து வருகிறோம்.
தற்போது கார்த்திகை பண்டிகை வருவதால், மக்களின் ரசனைக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும், அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலும் பொருள்களைத் தயாரித்துத் தருகிறோம்.
இந்த ஆண்டு கார்த்திகை பண்டிகைக்காக சிறப்புத் தயாரிப்பாக வாஸ்து உருளி விளக்கும், விநாயகர், லக்ஷ்மி மண்டபத்தில் அமர்ந்துள்ள நிலையில் மண்டப விளக்கு, விளக்கைத் தலைகீழாகத் திருப்பி விளக்கின் அடிப் பகுதியில் எண்ணெய் ஊற்றி, பின்னர் நேராக வைத்து எரியு வைத்தால் எண்ணெய் கீழே சிந்தாமல் எரியும் மேஜிக் விளக்கு, கேட்டதை எல்லாம் கற்பக விருட்சம் கொடுக்குமாம். அதனால் கற்பக விருட்சத்தைக் கொண்டு புதிதாக செய்யப்பட்டுள்ள கற்பக விருட்ச விளக்கு, போட் விளக்கு, கும்ப விளக்கு என பல்வேறு வடிவங்களில் புதுப்புது விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ரூ. 1 முதல் ரூ. 100 வரையிலான விளக்குகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. களிமண்ணைக் கொண்டு கைகளால் விளக்குகள், பொம்மைகள் தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மானாமதுரையில் இருந்து பொம்மைகள் தயாரிக்க களிமண் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் எங்களுக்கு உதவி வருவதைத் தொடர்ந்து, மலைக்கேணி அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் இருந்து களிமண்ணை எடுத்து பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் ஒரேமாதிரியான வடிவங்களில் பொருள்களைச் செய்யமால் கற்பனை ரசனையுடன் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும்போது அவற்றைச் சந்தைப்படுத்துவது மிக எளிதாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்குவதோடு மட்டுமில்லாமல், அவ்வப்போது சில வடிவமைப்புகளை அவரே உருவாக்கித் தந்து வருகிறார்.
இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் அரசு நடத்திவரும் கண்காட்சிகள், கடைகள் மட்டுமின்றி, தனியார் கடைகளுக்கும் பெருமளவு அனுப்பி வருகிறோம். தமிழகத்தில் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் கைவினைப் பொருள்கள் அனுப்பப்படுகிறது. சிலர் எங்களின் தயாரிப்புகளை வாங்கி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
நடப்பாண்டில் உற்பத்தி நல்ல நிலையில் இருப்பது மட்டுமின்றி, விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது என்றார் கஜேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

