மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், ஜன. 8: விலைவாசி உயர்வைக் கண்டித்து தளவாய்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; தளவாய்புரத்தில் மோசமான நிலையில் உள்
Updated on
1 min read

ராஜபாளையம், ஜன. 8: விலைவாசி உயர்வைக் கண்டித்து தளவாய்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; தளவாய்புரத்தில் மோசமான நிலையில் உள்ள சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தளவாய்புரம் பஸ் நிலையம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சம்மேளன விருதுநகர்  மாவட்ட செயலாளர் சரோஜா தலைமை வகித்தார். ராஜபாளையம் தாலுகா தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் லிங்கம்மாள், செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் ராஜபாளையம் நகரச் செயலாளர் ரவி, ஒன்றியச் செயலாளர் வனராஜ், தளவாய்புரம் செயலாளர் சண்முககுரு உள்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், கேஸ் சிலிண்டரை கொண்டுவந்து அதற்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com