விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்

தேனி, ஜன. 8:தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இடையிலான விளையாட்டுப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தேனி, ஜன. 8:தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை(ஜன.10) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில் காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில், ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும், தடகளப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜனவரி 10-ம் தேதி தடகளப் போட்டிகளும், 11-ம் தேதி கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளும் நடைபெறும். ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஜனவரி 10-ம் தேதி ஹாக்கி போட்டி நடைபெறும்.

இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.