ராஜபாளையம், ஜன. 8: ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். ரத்த தான கிளப், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.
ரத்த தான முகாமை, விருதுநகர் மாவட்ட துணைப் போக்குவரத்து ஆணையர் ரோட்டரிக்கோ துவக்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அதிகாரி செல்வக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, ராஜபாளையம் டி.எஸ்.பி. ராஜகோபால் ரத்த தானத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வரவேற்று, முதல் ரத்த தானத்தை வழங்கினார். பி.ஏ.சி.ஆர். ரத்த தான கிளப் தலைவர் பி. ரவி முன்னிலை வகித்தார்.
ராஜபாளையம் ரோட்டரி கிளப் மருத்துவர்கள் பன்னீர்செல்வம், கோதண்டராமன், ரோட்டரி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி ஜவகர்லால், விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாஸ்கரன், சிவகாசி மோட்டார் வாகன ஆய்வாளர் தர்மானந்தன் உள்பட பலர் பேசினர். இதில், ஏராளமானோர் ரத்த தானம் வழங்கினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி சங்கத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.