தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

தேனி, ஜன. 8:தேனியில் காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் முன்னாள் மாநில செயலர் க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தேனி, ஜன. 8:தேனியில் காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் முன்னாள் மாநில செயலர் கங்கைச்செழியன், மாவட்ட செயலர்கள் கோபால், ஜமால் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கம்பம்-திண்டுக்கல் அகல ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் பங்களிப்பு நிதியை வழங்க வலியுறுத்தி தேனியில் அனைத்து வர்த்தகர் சங்கங்களை ஒருங்கிணைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, குமுளி-திண்டுக்கல் நான்கு வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மின் தடையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.