பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

உசிலம்பட்டி. ஜன. 8: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் மதுரை லேடி டோக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவிகளின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.   ஆரியபட்டி கிராமச் சாவடிய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

உசிலம்பட்டி. ஜன. 8: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் மதுரை லேடி டோக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவிகளின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  ஆரியபட்டி கிராமச் சாவடியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பஞ்சாயத்துத் தலைவர் மகேஸ்வரி பாண்டியன் தலைமை வகித்தார். லேடி டோக் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் ஆர்.எம்.நாகம்மை வரவேற்றார்.

  சுவீட்ஸ் சிட்டி லயன்ஸ் கிளப் பொருளாளர் இளங்கோவன், மதன் கிஷோர், எல்.ஐ.சி. முகவர் முரளிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்புரையாக நுகர்வோர் சங்கத் தலைவர் எம்.சின்னக்கண்ணன், மகளிர் குடிமக்கள் நுகர்வோர் மன்றச் செயலர் பாக்கியலட்சுமி, உசிலம்பட்டி டி.எஸ்.ஒ. அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோர் உரிமைகள், கடமை விழிப்புணர்வு குறித்துப் பேசினர்.

   இந்த விழிப்புணர்வு முகாமில் மாணவியரின் வீதி நாடகம், உணவுப் பொருள்களின் கலப்படம்- விழிப்புணர்வு வில்லுப்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.