திண்டுக்கல், ஜன. 17: எத்தனையோ கிராமத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற போதிலும், சேவுகம்பட்டி கிராமத்தில் ஊர் நன்மைக்காக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா நூதனமான ஒன்றாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலையில் வத்தலகுண்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது சேவுகம்பட்டி கிராமம். இங்கு சோலைமலை அழகர்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இங்குள்ள சோலைமலை அழகர்பெருமாள் கோவிலில் ஊர் மொத்தமும் சேர்ந்து கூடை கூடையாக வாழைப்பழங்களை தங்களது வீட்டிலிருந்து எடுத்து வந்து, கோவில் முன் வழிபட்டு சூரம் விட்டு (பக்தர்கள் கூட்டத்தில் வீசி) தங்களது நேர்ச்சையைச் செலுத்துகின்றனர்.
இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களான மு. ரங்கசாமி நாயுடு, நாகராஜ், போத்திராஜ் ஆகியோர் கூறியது.
பரம்பரை பரம்பரையாக சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு தை மாதம் 3 ஆம் தேதி இதுபோன்ற விழாவை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும், திருவிழாவின் போது அனைவரும் ஊருக்குத் திரும்பி வந்து சாதி, மத பாகுபாடின்றி வாழைப் பழங்களை வாங்கி, அவரவர் வீடுகளில் இருந்து ரெங்கம்மாள் கோவிலுக்கு எடுத்து வருவர். ஊர் முழுவதிலும் உள்ளவர்கள் கூடைகளில் எடுத்து வரும் பழங்களை பின்னர் ஊர்வலமாக எடுத்து வந்து சோலைமலை அழகர் பெருமாள் கோவில் வைத்து வழிபட்டு, பின்னர் அவற்றை சூரம் விடுவார்கள்.
இவ்வாறு சூரம் விடப்படும் பழங்களை ஊர் மக்கள் பிரசாதமாக எடுத்து தங்களது வீட்டுக்குக் கொண்டு செல்வர். இத் திருவிழா தங்களது நேர்த்திக் கடனாக மட்டுமின்றி, ஊர் செழித்து வாழ வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
கூடை கூடையாக வாழைப்பழங்களை கொண்டு வந்தவர்கள் கூட சூரம் விடும் பழங்களை தரையிலிருந்து எடுத்துச் செல்லும் திருவிழா விநோதமானதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

