நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பண விநியோகம்: சுயேச்சை வேட்பாளர் மீது புகார்

மதுரை, அக். 8: உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக சுயேச்சை வேட்பாளர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.  66-வது வார்டு வில்லாப

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

மதுரை, அக். 8: உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக சுயேச்சை வேட்பாளர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.

 66-வது வார்டு வில்லாபுரம் பகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுபவர் சுவாமிநாதன். இவருக்கு தென்னை மரச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்னை மரச் சின்னத்துடன் கூடிய நோட்டீஸ் வில்லாபுரம் நமசிவாயம் தெரு, மணிகண்டன் நகர் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தெற்குவாசல் போலீஸôர் வில்லாபுரம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஈஸ்வரி, சித்ரா ஆகிய இருவரிடமும் ஆயிரம் ரூபாய்த் தாளைக் கைப்பற்றி விசாரித்தனர். சுயேச்சை வேட்பாளர் சுவாமிநாதனும், அவருடன் வந்த மனோகரன் என்பவரும் ஓட்டுக்காக பணம் விநியோகித்ததாக அந்தப் பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுயேச்சை வேட்பாளரிடம் போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மனோகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 அதிமுக, திமுக மீது வழக்கு: தெற்குவாசல் மறவர் சாவடி பகுதியில் அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பிரசாரத்துக்காக வந்தபோது வெடி வெடித்து வரவேற்றதாக அந்தப் பகுதி அதிமுகவினர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர். எஸ்.எஸ்.காலனி பகுதியில் திமுக தேர்தல் காரியாலயம் அமைத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி வெடிவெடித்து, பிரசாரம் மேற்கொண்டதாக திமுகவினர் மீதும், இதே காரணத்துக்காக அதிமுகவினர் மீதும் போலீஸôர் வழக்குகள் பதிந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.