ராஜபாளையம். பிப். 10: ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்தவர்களைக் கண்டித்த போக்குவரத்து தலைமைக் காவலர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் (32), சேதுராமன் (41). இவர்கள் வியாழக்கிழமை இரவு குடிபோதையில் தகராறு செய்துள்ளனர்.
இதை இப்பகுதியில் வசிக்கும் ராஜபாளையம் போக்குவரத்து தலைமைக் காவலர் தாமரைக்கண்ணன் (40) கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், சேதுராமன், நாகராஜின் தந்தை குருவராஜ் ஆகியோர் தலைமைக் காவலர் தாமரைக்கண்ணனை சரமாரியாகத் தாக்கினார்களாம்.
இது குறித்து தாமரைக்கண்ணன் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து நாகராஜ், இவரது தந்தை குருவராஜ், சேதுராமன் ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.