எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாகர்கோவில்-பெங்களூருக்கு தினசரி ரயிலை விரைவில் இயக்க வலியுறுத்தல்

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தவாறு, நாகர்கோவில்-பெங்களுர் ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என பெங்களூர் வாழ் நெல்லை குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக, இச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:   இந்த ரயில்

Updated On :12 மே 2013, 5:57 am IST

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தவாறு, நாகர்கோவில்-பெங்களுர் ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என பெங்களூர் வாழ் நெல்லை குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

  இது தொடர்பாக, இச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:   இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக தினசரி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலை விரைவாக இயக்க, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

  தற்போது இயக்கப்படும் தூத்துக்குடி-மைசூர் தினசரி ரயில் அதிகாலையில் பெங்களூர் செல்லும் வகையில் உள்ளது. இதேபோன்று, நெல்லை மற்றும் குமரி மாவட்ட மக்களின் நலன் கருதி, நாகர்கோவில்-பெங்களூர் ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்குவதுடன், அதிகாலையில் பெங்களூர் செல்லும் வகையில் இயக்க வேண்டும்.

  அதாவது, நாகர்கோவிலில் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, பெங்களூருக்கு அதிகாலையில் செல்லும் வகையிலும், மறு மார்க்கத்தில் பெங்களூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் வகையில் இந்த ரயில் இயக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.