மதுரை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் பெகாசஸ் கூடைப்பந்து கிளப் ஆகியன இணைந்து நடத்தும், வி.வி.டி. சுழற்கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை துவங்கியது.
பசுமலை சி.எஸ்.ஐ. பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெகாசஸ் கிளப் தலைவர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கலந்துகொண்டு, போட்டியைத் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ. சந்திரகாந்தா ஜெயபாலன், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், அப்பலோ மருத்துவமனை டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில், மாவட்டக் கூடைப்பந்து அசோசியேஷன் தலைவர் சீனிமொகைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகள் வரும் 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகின்றன. இதில், விஜயா வங்கி அணி, கேரள ஸ்டேட் போலீஸ் அணி, ஐ.ஓ.பி. அணி, இந்தியன் வங்கி அணி உள்பட தேசிய அளவில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியானது, தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். முதல் பரிசாக சுழற்கோப்பை மற்றும் ரூ. 25 ஆயிரம், 2 ஆவது பரிசாக சுழற்கோப்பை மற்றும் ரூ. 15 ஆயிரம், 3 ஆவது பரிசாக சுழற்கோப்பை மற்றும் ரூ. 10 ஆயிரம், 4 ஆவது பரிசாக சுழற்கோப்பை மற்றும் 5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


