பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மதுரை காவல் துறையினரின் வாரிசுகளுக்கு ரூ.13.50 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கல்

மதுரை காவல் துறையில் பணிபுரிவோரின் பிள்ளைகளின் கல்விக்கான உதவித்தொகை ரூ.13.50 லட்சத்தை மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சனிக்கிழமை வழங்கினார்.

Updated On :12 மே 2013, 6:01 am IST

மதுரை காவல் துறையில் பணிபுரிவோரின் பிள்ளைகளின் கல்விக்கான உதவித்தொகை ரூ.13.50 லட்சத்தை மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சனிக்கிழமை வழங்கினார்.

  ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் காவல் துறையில் பணிபுரியும், காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

   நிகழ்ச்சியில் மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா வரவேற்றுப் பேசுகையில், அரசு வழங்கும் இந்த உதவித்தொகை மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிப்பதாக அமையும். தொழிற்கல்வி, கலை, அறிவியல் முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன என்றார்.

   பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை படித்த 81 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், எம்.சி.ஏ., எம்.ஏ., உள்ளிட்ட பிரிவில் படிக்கும் 22 பேருக்கு தலா ரூ.7,500,  எம்.காம்., எம்.எஸ்.சி, எம்.ஏ. படிக்கும் 12 பேருக்கு தலா ரூ.4,500, பி.எஸ்.சி., பி.காம்., படிப்போர் 59 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம், டிப்ளமோ மற்றும் பி.எட்., படிக்கும் 29 பேருக்கு தலா ரூ.3500 வழங்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக போலீஸாரும் போலீஸ் அதிகாரிகளும் தங்களது பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.

  நிகழ்ச்சியில், உதவி ஆணையர்கள் கணேசன் (திலகர் திடல்),  மகுடபதி (போக்குவரத்து), தனபால் (தல்லாகுளம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.