மதுரை காவல் துறையில் பணிபுரிவோரின் பிள்ளைகளின் கல்விக்கான உதவித்தொகை ரூ.13.50 லட்சத்தை மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சனிக்கிழமை வழங்கினார்.
ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் காவல் துறையில் பணிபுரியும், காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா வரவேற்றுப் பேசுகையில், அரசு வழங்கும் இந்த உதவித்தொகை மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிப்பதாக அமையும். தொழிற்கல்வி, கலை, அறிவியல் முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன என்றார்.
பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை படித்த 81 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், எம்.சி.ஏ., எம்.ஏ., உள்ளிட்ட பிரிவில் படிக்கும் 22 பேருக்கு தலா ரூ.7,500, எம்.காம்., எம்.எஸ்.சி, எம்.ஏ. படிக்கும் 12 பேருக்கு தலா ரூ.4,500, பி.எஸ்.சி., பி.காம்., படிப்போர் 59 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம், டிப்ளமோ மற்றும் பி.எட்., படிக்கும் 29 பேருக்கு தலா ரூ.3500 வழங்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை பெறுவதற்காக போலீஸாரும் போலீஸ் அதிகாரிகளும் தங்களது பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில், உதவி ஆணையர்கள் கணேசன் (திலகர் திடல்), மகுடபதி (போக்குவரத்து), தனபால் (தல்லாகுளம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


