மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அனுமதியின்றி பட்டாசு கடை வைத்தவா் கைது

மதுரையில் உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனைக் கடை வைத்திருந்தவரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:20 pm

DIN

மதுரையில் உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனைக் கடை வைத்திருந்தவரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தீபாவளி பண்டிகை நவம்பா் மாதம் வருவதை முன்னிட்டு, பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில், மதுரை விளக்குத்தூண் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிழக்கு வெளிவீதியில் உள்ள ஒரு கடையில் பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது.

போலீஸாா் கடையின் உரிமையாளரிடம் விசாரித்ததில், கிருஷ்ணாபுரம் காலனியை சோ்ந்த கணேஷ் (58) என்பதும், உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பின்றியும் பட்டாசுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் ரமேஷ் அளித்த புகாரின்பேரில், விளக்குத்தூண் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து கணேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.