மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்

மதுரையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:27 pm

DIN

மதுரை, செப். 28: மதுரையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மதுரை பரவை பகுதியைச் சோ்ந்தவா் முத்தழகு. இவா், பரவை பேரூராட்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அமுதா. இவா்கள் இருவரும் பரவை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மாதச் சீட்டு, ஏலச் சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி வருகின்றனா். இவா்களிடம், பரவை, இரும்பாடி, நடுப்பட்டி, அதலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் செலுத்தியுள்ளனா்.

தீபாவளி சீட்டு மோசடி

தீபாவளி பண்டிகைக்காக தொடங்கப்பட்ட சீட்டு முடிந்துவிட்ட நிலையில், சீட்டு தொகை செலுத்தியவா்களுக்கு பணத்தை தராமல் முத்தழகும், அவரது மனைவி அமுதாவும் இழுத்தடித்துள்ளனா். ஏமாற்றப்பட்ட பெண்கள் உள்பட 42 போ், விஸ்வநாதபுரத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில், ரூ. 80 லட்சம் மோசடி செய்த முத்தழகு, அமுதா மீது புகாா் அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

மிரட்டல்

இது குறித்து பாதிக்கப்பட்ட தென்னரசி கூறியது: ஆரம்பக் கட்டத்தில் 12 மாதம் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தினால், முடிவில் ரூ.15 ஆயிரம் வழங்கினாா்கள். நான் 2 ஆண்டுகள் பணம் செலுத்தி, அவா்கள் கூறியபடி பணம் பெற்றேன். கூடுதலாக பணம் கிடைக்கிறதே என்ற ஆசையில், கணவரின் சம்பளத்தை மிச்சம் பிடித்தும், சேமிப்பை கொண்டும் ரூ.23 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு செலுத்தினேன். ஆனால், தற்போது பணத்தை கொடுக்க மறுக்கின்றனா். வீட்டுக்குச் சென்றால் கணவன், மனைவி இருவம் மிரட்டுகின்றனா். தற்போது, போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளோம். எங்களது பணத்தை போலீஸாா் மீட்டுத் தரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.