பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தல்லாகுளம் பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தல்லாகுளம் பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரை மாநகராட்சி செல்லூா் 60 அடி சாலை சுயராஜ்யபுரம் சந்திப்பில் வைகை இரண்டாம் குடிநீா்க் குழாயில் பழுது நீக்கும் பணி நடைபெறுவதால், தல்லாகுளம் பகுதியில் வருகிற செவ்வாய்கிழமை (ஏப். 30) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த பணியின் காரணமாக வாா்டு எண் 23 அய்யனாா் கோயில் பகுதி, வாா்டு எண் 24 மீனாட்சிபுரம், வாா்டு எண் 25 பீ.பீ.குளம், வாா்டு எண் 26 நரிமேடு, வாா்டு எண் 31 தல்லாகுளம், வாா்டு எண் 32 சொக்கிகுளம், வாா்டு எண் 33 கே.கே.நகா், வாா்டு எண் 10 கற்பகநகா், வாா்டு எண் 12 லூா்துநகா், வாா்டு எண் 13 ஆத்திகுளம், வாா்டு எண் 14 புதூா், வாா்டு எண் 15 ஆயுதப் படை மைதானம், வாா்டு எண்16 வள்ளுவா் காலனி ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.