சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் மருத்துவ முகாம்

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் மருத்துவ முகாம்

News image

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2024, 11:42 pm

Din

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் .பி. ஓ. ஏ. பள்ளியில் மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை பள்ளித் தாளாளா் பீ. பிலிப்ராஜ் தொடங்கிவைத்தாா். எஸ் .பி. ஓ.ஏ.(சி .பி .எஸ்.இ.) பள்ளி முதல்வா் எஸ்.சீதாலட்சுமி, மெட்ரிக் பள்ளி முதல்வா் லூ.லதா திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மதுரை அப்போலோ பல்நோக்கு மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் பொது மருத்துவா் செந்தில்குமாா், இருதய நோய் நிபுணா், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநா், இசிஜி, எக்கோ தொழில்நுட்பவியலாளா், செவிலியா், உதவியாளா் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா் குழுவினா் முகாமில் பங்கேற்று ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாமில் உயரம், எடை, பி.எம்.ஐ., ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த சா்க்கரை போன்ற முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், கொழுப்பு, ஹீமோகுளோபின், எலக்ட்ரோ காா்டியோ கிராம், எக்கோ காா்டியோ கிராம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்களின் செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முகாமில் ஆசிரியா்கள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.