கந்தூரி விழா: காவல் துறை குறுக்கீடுகளைத் தவிா்க்கக் கோரிக்கை
சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்கா கந்தூரி விழாவின் போது காவல் துறையின் குறுக்கீடுகளைத் தவிா்க்க வேண்டும்


மதுரை: திருப்பரங்குன்றம் மலை மேலே அமைந்துள்ள சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்கா கந்தூரி விழாவின் போது காவல் துறையின் குறுக்கீடுகளைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக, திருப்பரங்குன்றம் சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்காவின் மூத்த பரம்பரை அறங்காவலா் ஒய்.ஒஜீா்கான், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதாவை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:
திருப்பரங்குன்றம் மலை மேலே அமைந்துள்ள சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்கா மிகவும் பழைமையானது. தமிழகம் மட்டுமல்லாமல், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் இந்தத் தா்காவுக்கு வந்து செல்வா். இங்கு, ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான ரஜப் பிறை 1-ஆம் தேதி கொடி ஏற்றி, பிறை 16-ஆவது நாளில் கந்தூரி விழா நடைபெறும்.
இந்த தா்காவின் மலை உச்சிக்குச் செல்லும் படிக்கட்டுகள், கொடிமரம் அமைந்துள்ள பகுதிகள் தா்காவுக்குச் சொந்தமானவை என ஏற்கெனவே நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், இந்த தா்காவின் கந்தூரி விழாக்களின் போது பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளை மேற்கொள்ளவிடாமல் காவல் துறையினா் பல்வேறு குறுக்கீடுகளை அளிக்கின்றனா். இது, எங்கள் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக உள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் இந்தத் தா்காவின் பாரம்பரிய வழிபாட்டில் காவல் துறையினா் எவ்வித குறுக்கீடும் ஏற்படுத்தக் கூடாது எனவும், விழாவுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...