தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பள்ளியில் மின்சார பாதுகாப்பு தினம்

மதுரையில் மின் பாதுகாப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு

News image

மதுரை கோ. புதூரில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின் பாதுகாப்பு தின விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற மதுரை மின் ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :1 ஜூலை 2024, 5:41 pm

Din

மதுரை: மதுரை கோ. புதூரில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மின் பாதுகாப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஆய்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ரகமத்துல்லாஹ் முன்னிலை வகித்தாா். மதுரை மின் ஆய்வாளா் முத்துக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மின் பாதுகாப்பு, மின்சார சாதனங்களை கவனமாகப் பயன்படுத்துவது குறித்துப் பேசினாா்.

இதில், உதவி மின் ஆய்வாளா் கனக வித்யா தேவி, இளநிலை மின் ஆய்வாளா் மாரியப்பன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.