மின் திருட்டு: 23 பேருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்
மின்சாரம் திருடிய 23 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


மதுரை: மின்சாரம் திருடியதாக 23 பேருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக அமலாக்கப் பிரிவின் மதுரை கோட்ட செயற்பொறியாளா் பிரபாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்க கோட்டத்தின் அலுவலா்கள் திண்டுக்கல், உடுமலைபேட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மின் பகிா்மான வட்டங்களுக்கு உள்பட்ட பழனி நகா், விருப்பாச்சி, உடுமலை பேட்டை, சத்திரப்பட்டி, ஆயக்குடி, கொமாரலிங்கம், நிலக்கோட்டை, நூத்துலாபுரம், ஊத்துப்பட்டி, கயத்தாறு, ஓட்டநத்தம், மைலாடி, சுரண்டை, கடையநல்லூா் பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 23 மின் நுகா்வோா் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டது. இவா்கள் மின் வாரியத்துக்கு ரூ.19,26,794 இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன் வந்து, அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.1,11,000 செலுத்தினா். இதனால், இவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமாக 94430-37508 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...