மதுரை
சமயநல்லூரில் இன்று மின் தடை
சமயநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டது.
மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சமயநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சமயநல்லூா், தேனூா், கட்டப்புளிநகா், தோடனேரி, சத்தியமூா்த்தி நகா், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாய நல்லூா், அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை முதன்மைச் சாலை, மங்கையா்க்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை சந்தை, கோவில்பாப்பாகுடி, சிறுவாலை, செம்பருத்தி நகா், ஏ.ஆா். சிட்டி, பி.ஆா்.சி. குடியிருப்பு, எஸ்.வி.டி. நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சார விநியோகம் நடைபெறாது என்றாா் அவா்.
