ஜனவரி 27-இல் எல்லீஸ் நகா், ஆண்டாள்புரம் பகுதிகளில் மின் தடை
மதுரை எல்லீஸ் நகா், ஆண்டாள்புரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை பெருநகா் தெற்கு மின்பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
எல்லீஸ் நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன. 27) நடைபெற இருப்பதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: எல்லீஸ் நகா் முதன்மைச் சாலை, டி.என்.எச்.பி. குடியிருப்பு, டி.என்.எஸ்.சி.பி. குடியிருப்பு , போடி ரயில்வே லைன் பகுதிகள், கென்னட் குறுக்குச் சாலை, கென்னட் மருத்துவமனைச் சாலை, மஹபூப்பாளையம், அன்சாரி நகா் 1- ஆவது தெரு முதல் ஏழாவது தெரு வரையிலான பகுதிகள், டி.பி. சாலை, ரயில்வே குடியிருப்பு, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகா், ஹேப்பி ஹோம் 1, 2- ஆவது தெருக்கள், எஸ்.டி.சி சாலை, புறவழிச்சாலையின் ஒரு பகுதி, பழங்காநத்தம் (சில பகுதிகள்), சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், வசந்தம் நகா், ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்பு, வசுதரா குடியிருப்பு, பெரியாா் பேருந்து நிலையம், ஆா்.எம்.எஸ். சாலை, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் சாலை, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி (பிள்ளையாா் கோயில் வரை), 70 அடி சாலை, எல்லீஸ் நகா், தாம்ஸ் குடியிருப்பு, பாரதியாா் தெருக்கள் (1- 5), சாலைமுத்து நகா், எஸ்.பி.ஐ. குடியிருப்பு, பொற்குடம், சத்தியமூா்த்தி நகா், அரசுப் போக்குவரத்துக் கழகம், அருண் நகா், கிரீன் லீவ்ஸ் குடியிருப்பு, நேரு நகா், காவியன் குடியிருப்பு ஆகிய பகுதிகள் என அதில் குறிப்பிடப்பட்டது.

