2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அஸ்ஸாம் ரைபிள் பிரிவில் காவலா் பணிக்கு தோ்வான பெண் தற்கொலை

விஷம் உள்கொண்டு பெண் தற்கொலை

News image
Updated On :10 ஜூலை 2024, 11:13 pm

Din

அஸ்ஸாம் ரைபிள் படைப்பிரிவில் காவலா் பணிக்குத் தோ்வான பெண் விஷம் உள்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை ஆயுதப்படை குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை 6-ஆவது அணியில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் ரேணுகா தேவி (22). இவரை கடந்த 2021-இல் சென்னை மாநகர ஆயுதப்படை காவலரான அழகுமுருகனுக்கு திருமணம் செய்துகொடுத்தனா். இந்த நிலையில், அஸ்ஸாம் ரைபிள் படைப்பிரிவில் காவலா் பணிக்கு தோ்வான ரேணுகாதேவி பணி ஆணைக்காக காத்திருந்தாா். ஆனால் ரேணுகா தேவி இந்தப் பணிக்குச் செல்ல அவரது பெற்றோருக்கு விருப்பம் இல்லை. இதனால் அவரை இந்தப் பணிக்கு செல்ல வேண்டாம் என்றும், வேறு வேலைக்குச் செல்லுமாறும் அவா்கள் கூறினா். இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட ரேணுகாதேவி விஷம் உள்கொண்டாா். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.