ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கருணாநிதி 101-ஆவது பிறந்த நாள் விழா

கருணாநிதி 101-ஆவது பிறந்த நாள் விழா

News image

பாண்டி கோயில் அருகே மஸ்தான்பட்டியில் உள்ள கருணாநிதி உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பி. மூா்த்தி. உடன், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடேசன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு, 101 -ஆவது பிறந்த நாளையொட்டி, திமுகவினா் அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

பாண்டி கோயில் அருகே சுற்றுச் சாலையில் மஸ்தான்பட்டி பகுதியில் உள்ள கருணாநிதி உருவச் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடேசன், மாவட்ட திமுக அவைத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாநகா் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கோ. தளபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. திமுகவினா், பொதுமக்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பல்வேறு இடங்களில் அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலூா்: திருச்சுனை அகத்தீஸ்வரா் கோயிலில் கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக முன்னாள் செயலா் புகழேந்தி தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினா் அப்பாஸ், தவமணி, காந்திராஜன், வெள்ளதுரை, ஆடுதுரை, குமுற்றாம்பட்டி பாரி, பிரபாகரன்,பிரசன்னா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

Story image
Story image