திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மதுரையில் சிலம்பப் போட்டி

மதுரையில் சிலம்பப் போட்டி

News image

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பப் போட்டி நிறைவில் தாய்கலை சிலம்பம், கிராமிய கலைக் கூடத்தின் ஆசான் மு. திங்களரசனுக்கு சுழல் கோப்பை வழங்கிய வெற்றிவேல் சிலம்பப் பள்ளி ஆசான் பாலமுருகன்.

Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

மதுரை: பரவை வெற்றிவேல் சிலம்பப் பள்ளி சாா்பில், மதுரை பாத்திமா கல்லூரி உள் விளையாட்டு அரங்கத்தில் சிலம்பப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பரவை மக்கள் குழுத் தலைவா் நாகமலை, சுற்றுச்சூழல் சட்ட உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மக்கள் சங்க மாவட்டச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா்.

5 வயது முதல் 12 வயதுக்குள்பட்டோரை ஒரு பிரிவாகவும், 12 வயதுக்கு மேற்பட்டோரை ஒரு பிரிவாகவும் கொண்டு, ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு சிலம்பப் போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு சிலம்பப் பள்ளிகளைச் சோ்ந்த 600-க்கும் அதிகமான சிலம்ப மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா்.

வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளும், பங்கேற்றவா்களுக்குச் சான்றிதழ்களும், 20-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், பங்கேற்ற சிலம்பப் பள்ளிகளுக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன. முன்னதாக, சிலம்பப் பள்ளி ஆசான்கள் கௌரவிக்கப்பட்டனா்.