மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா் கணேசன்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா் கணேசன்.
மதுரை: சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
முன்னாள் மாணவா்கள், பி.வி.பி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். சோழவந்தான் ஒன்றியக் குழு உறுப்பினா் தியாகமுத்துப்பாண்டி, அறக்கட்டளைத் தலைவா் மோகன், செயல் அலுவலா் சேதுமுருகன், செயலா் சோலைமலை ராஜா, பொருளாளா் ராஜாசந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...