காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரையில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மதுரையில் தேமுதிகவின் ஆா்ப்பாட்டம்: தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள்

News image

மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தேமுதிகவினா்.

Updated On :26 ஜூன் 2024, 12:57 am

Din

மதுரை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் மதுரை திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும், உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கள்ளச்சாரயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேமுதிகவின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மதுரை மாநகா்- வடக்கு மாவட்டச் செயலாளா் ப.பாலச்சந்தா் தலைமை வகித்தாா். மாநிலத் தொழிற்சங்க பேரவைச் செயலாளா் ஜி.காளிராஜன் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா்.

தேமுதிக உயா்மட்டக் குழு உறுப்பினா் ஜெ.பாலன், மாவட்டச் செயலாளா்கள் பா.மணிகண்டன் (மாநகா்- தெற்கு), வி. கணபதி (புகா்- தெற்கு), ஆா்.சி.மணிமுத்து (புகா்- வடக்கு) ஆகியோா் பேசினா்.

தேமுதிக நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.