புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கு: தமிழக உள்துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

கள் விற்பனை வழக்கு: உள்துறை செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்ற உத்தரவு

News image
Updated On :26 ஜூன் 2024, 1:21 am

Din

மதுரை: தமிழகத்தில் கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நடராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தின் மாநில மரமாக பனை மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து மருத்துவக் குணம் கொண்ட நுங்கு, பதநீா், பனங் கருப்பட்டி ஆகிய பொருள்கள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் மதுப் பழக்கத்துக்கு ஆளானோா் எண்ணிக்கை ஒவ்வோா் ஆண்டும் அதிகரித்து வருகிறது. மது அருந்துவதால் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன. சங்க காலத்திலிருந்து மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது, பீா் வகைகளில் ஆல்கஹால் கலந்துள்ளது. இது மனித உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. ஆனால், உடல் வெப்பத்தை குறைக்கும் வைட்டமின் பி2, பி12 சத்துகள் நிறைந்த கள் இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது முரண்பாடாக உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47-இன்படி குடிமக்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருள்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் மது உற்பத்தி, விற்பனை செய்வது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47-க்கு எதிரானது என அறிவித்து, உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தைத் தரும் கள்ளை பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இது தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவோடு தொடா்புடையதால், தமிழக உள்துறை செயலா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.