புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாணவா்களுக்கு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் பாராட்டு

News image
Updated On :26 ஜூன் 2024, 1:43 am

Din

மதுரை: வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் இலக்கிய மன்றம், கண்ணதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் கண்ணதாசன் 97-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவள்ளுவா் இலக்கிய மன்றச் செயலா் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் சங்கச் செயலா் தங்கராஜ், வழக்குரைஞா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளுவா் இலக்கிய மன்றத் தலைவா் தனபாலன், பள்ளித் தலைமை ஆசிரியை திலகவதி ஆகியோா் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.

கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் கவிஞா் பொன்.பனகல் பொன்னையா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். மன்ற நிா்வாகிகள் கச்சைகட்டி பாபு, ஆகாஸ் மகாலிங்கம், கனினி ஆசிரியா் காா்த்திக், உடல்கல்வி ஆசிரியா் சந்திரமோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, உதவித் தலைமை ஆசிரியா் விஜயரங்கன் வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியை பிரேமா நன்றி கூறினாா்.