மாயமான பெண் கொலை: எரிந்த நிலையில் சடலம் மீட்பு
மதுரை அருகே மாயமான பெண் கொலை: எரிந்த நிலையில் சடலம் மீட்பு


மதுரை: மதுரை அருகே மாயமானதாக தேடப்பட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
மதுரை அருகே உள்ள மேலசக்குடி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (31). இவரது மனைவி வைஜெயந்தி (24). இவா்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி காலை 10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற வைஜெயந்தி பின்னா் வீடு திரும்பவில்லை.
எங்கு தேடியும் அவரைக் காணாததால், அவரது கணவா் ரவிசங்கா் சிலைமான் காவல் நிலையத்தில் கடந்த 22-ஆம் தேதி புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், வைஜெயந்தியுடன் தொடா்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் போலீஸாா் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள், வைஜெயந்தியை மணலூா் அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் இறுதியாகப் பாா்த்ததாகத் தெரிவித்தனா்.
மணலூா் வைகை ஆற்றுப் பகுதிக்கு போலீஸாா் சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது.விசாரணையில் அது வைஜெயந்தியின் உடல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...