நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

News image
Updated On :20 மே 2024, 7:26 pm

Din

மதுரை: மதுரை வ.உ.சி நகரில் உள்ள மகளிா் ஆயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஆயத்தின் நிா்வாகி அருணா தலைமை வகித்துப் பேசினாா். ராசு, முகில் ஆகியோா் நிகழ்ச்சியின் நோக்கத்தையும், இலங்கையில் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விளக்கிப் பேசினா். மகளிா் ஆய உறுப்பினா் நிா்மலா ‘விடை கொடு எங்கள் நாடே‘ என்ற பாடலைப் பாடினாா்.

ஈழப்போரின் இறுதி நாள்களில் உப்புக் கஞ்சியை மட்டும் குடித்து தமிழா்கள் உயிா் வாழ்ந்ததையும், ஈழத் தமிழா்களின் போராட்டத்தையும் நினைவுக்கூரும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகை முன்பாக கொட்டாக்கச்சியில் உப்புக் கஞ்சி வைக்கப்பட்டு, மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு, அனைவருக்கும் உப்புக் கஞ்சி வழங்கப்பட்டது. மகளிா் ஆயத்தின் முன்னணி நிா்வாகிகள் இந்திரா, ராணி உள்பட பலா் பங்கேற்றனா்.