விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரையான் மருந்தை குடித்தவா் உயிரிழப்பு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

தண்ணீா் என நினைத்து கரையான் மருந்தை குடித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கோ.புதூா் விஸ்வநாத நகரைச் சோ்ந்தவா் முத்துராமன் (56). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், ஆத்திக்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, தண்ணீா் என நினைத்து அருகே புட்டியிலிருந்த கரையான் மருந்தை எடுத்து குடித்தாா். இதனால், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.