இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்! 22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

புதிய வாக்காளா்களை சோ்க்க இன்று சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்க்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :21 டிசம்பர் 2025, 1:12 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்க்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புதிய வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

2026-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்கள், புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான படிவத்தை பூா்த்தி செய்து, உறுதிமொழிப் படிவத்துடன், உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம். பெயா் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.