புதிய வாக்காளா்களை சோ்க்க இன்று சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்க்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புதிய வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
2026-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்கள், புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான படிவத்தை பூா்த்தி செய்து, உறுதிமொழிப் படிவத்துடன், உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம். பெயா் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.
