மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயற்சி: குஷ்பு உள்பட பாஜக மகளிா் அணியினா் 400 போ் கைது

News image

மதுரையில் வெள்ளிக்கிழமை தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாகக் கைது செய்யப்பட்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2025, 9:45 pm

மதுரையில் காவல் துறையின் தடையை மீறி பேரணி செல்ல முயன்ாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு உள்பட அந்தக் கட்சியின் மகளிா் அணியினா் 400 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்காக நீதி கேட்கும் பேரணி மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என பாஜக சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பேரணிக்கு காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், தடையை மீறி பேரணி செல்வதற்காக மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் பகுதியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு, கட்சியின் மாநில மகளிா் அணித் தலைவி உமாரதி ஆகியோா் தலைமையில் அந்தக் கட்சியினா் திரண்டனா். ஆனால், பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்ததால், செல்லத்தம்மன் கோயிலில் உள்ள கண்ணகி சிலைக்கு மிளகாய்ப் பொடி அரைத்துப் பூசும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அவா்கள் மீண்டும் தடையை மீறி பேரணி செல்ல முயன்ால், போலீஸாா் அனைவரையும் கைது செய்தனா். இதற்கு குஷ்பு உள்ளிட்டோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை:

இந்தப் பேரணியில் பங்கேற்ற குஷ்பு பேசியதாவது:

இந்தப் பேரணி விளம்பரத்துக்காக நடத்தப்படவில்லை. திமுகவுக்குதான் விளம்பரம் தேவைப்படுகிறது. பெண்களுக்கு சுயமரியாதையை கற்றுக்கொடுத்த கருணாநிதி குடும்பத்தில் இருந்த வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்குத் தேவை நீதி மட்டுமே. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பல்வேறு நவீன வசதிகள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த வழக்கில் தொடா்புடையவா்களைப் பிடிக்க காவல் துறை காலதாமதம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.

விமானநிலையத்தில் பேட்டி:

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் குஷ்பு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சி ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சா்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறது. மக்களைத் திசை திருப்புவதற்காக மணிப்பூா் வன்முறை குறித்துப் பேசக் கூடாது. அந்த பிரச்னையும், பாலியல் விவகாரமும் ஒன்று கிடையாது. இதுகூடத் தெரியாமல் திமுகவினா் பேசுகிறாா்கள்.

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் தவெக தலைவா் விஜயும் தனது எதிா்ப்பைத் தெரிவித்திருக்கிறாா். ஆனால், இதுமட்டும் போதாது. தவெக-வுடனான கூட்டணி குறித்து கட்சியின் மேலிடம்தான் பதில் கூற முடியும் என்றாா் அவா்.