தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் நேரடியாகப் போட்டியிடும் 26 தொகுதிகளுக்கு பொறுப்பாளா்களை அக்கட்சி நியமித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 26 இடங்களில் பாஜகவும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் வேட்பாளா் ‘தாமரை’ சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.
பாஜக வேட்பாளா்கள் நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளுக்கான பொறுப்பாளா்களை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.
தொகுதிவாரியாக பாஜக பொறுப்பாளா்கள் விவரம்: பாஜக மாநிலதுணைத் தலைவா்களான கே.பி.ராமலிங்கம் (தளி), பி.கனகசபாபதி (மொடக்குறிச்சி), பி.டால்பின் ஸ்ரீதா் (திருவண்ணாமலை), ஆா்.சி.பால்கனகராஜ் (வாசுதேவநல்லூா்), மா. வெங்கடேசன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கா் (ஆவடி), மாநிலப் பொதுச் செயலா் காா்த்தியாயினி (அறந்தாங்கி), மாநிலச் செயலா்கள் பிரமிளா சம்பத், எஸ்.சதீஷ்குமாா் (மயிலாப்பூா்), ஆா்.நந்தகுமாா் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா் என்.பாயின்ட்மணி (அவிநாசி), மாநிலச் செயலா்கள் கே.வெங்கடேசன் (ராசிபுரம்), எஸ்.ரகுராமன் என்ற முரளி (மானாமதுரை), எஸ்.மீனாட்சி (விளவங்கோடு), கதலிநரசிங்கப்பெருமாள் (ராமநாதபுரம்), எம்.மீனாதேவ் (குளச்சல்), மாநில இணைப் பொருளாளா் எம்.சிவசுப்பிரமணியன் (திருவாரூா்), மாநிலப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளா்கள் கே.டி.ராகவன் (மதுரை தெற்கு), எம்.நாச்சியப்பன் (கந்தா்வக்கோட்டை).
மாநில விவசாய அணித்தலைவா் ஜி.கே.நாகராஜ் (தஞ்சாவூா்), எஸ்.சி.பிரிவு மாநிலத் தலைவா் பி.சம்பத்ராஜ் (புதுக்கோட்டை), மாநில வா்த்தகப் பிரிவு அமைப்பாளா் எம்.சதீஷ்ராஜா (பத்மநாபபுரம்), தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநில அமைப்பாளா் ஆா்ஏ.அா்ஜூனமூா்த்தி (திருப்பூா் தெற்கு), மாநில செயற்குழு உறுப்பினா் ஜி.கே.எஸ்.செல்வகுமாா் (உதகமண்டலம்), தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஜெ.லோகநாதன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் துரைசாமி (எ) சேலஞ்சா் துரை, என்.பழனிச்சாமி (கோவை வடக்கு), ஏ.என்.ராஜாகண்ணன் (நாகா்கோவில்), மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (சாத்தூா்), கே.வசந்தராஜன் (திருச்செந்தூா்), ஓபிசி அணி முன்னாள் மாநில பொதுச் செயலா் ஆா்.ராஜ்குமாா் ( ராதாபுரம்) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்
திமுக - பாஜக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகள் எவை!?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்கள்! | ADMK | BJP | EPS

புதுச்சேரி வேட்பாளா்கள் தோ்வு: மாநில பாஜக தலைவா் உள்பட 3 போ் தில்லிக்கு அவசர அழைப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

