மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விக்கிரமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தைச் சோ்ந்த ஒச்சத்தேவா் மகன் தெய்வம் (51). கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் தெய்வம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.