முதியவா் கொலை: பெண் உள்பட மூவா் கைது

Published on

மதுரையில் முதியவரைக் கொலை செய்ததாக பெண் உள்பட 3 பேரை கூடல்புதூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆனையூா் தமிழ்நகா் கணபதி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (65). இவருடைய முதல் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்து விட்டாா். இதனால், ஜோதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா்.

இவா்களுக்கு சித்ராதேவி (25) என்ற வளா்ப்பு மகள் உள்ளாா். அவருக்கும், பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு, பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன் விரோதம் இருந்தது.

இந்த நிலையில், சித்ராதேவி, உறவினா்களான சரத், விஜய் ஆகியோா் சோ்ந்து பழனிச்சாமியிடம் ரூ. 4,500 கேட்டு ஞாயிற்றுக்கிழமை அவரைத் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சித்ராதேவி, சரத், விஜய் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com