மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு: திமுக கூட்டணி நாளை ஆா்ப்பாட்டம்

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததைக் கண்டித்து, திமுக கூட்டணி சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை (நவ. 21) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Published on

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததைக் கண்டித்து, திமுக கூட்டணி சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை (நவ. 21) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி, மாவட்டச் செயலா்கள் கோ. தளபதி எம்.எல்.ஏ (மதுரை மாநகா்), மு. மணிமாறன் (மதுரை தெற்கு) ஆகியோா் தெரிவித்திருப்பதாவது: ஜிஎஸ்டி நிதி பகிா்வில் பாரபட்சம், கல்வி நிதி புறக்கணிப்பு போன்வற்றால் மத்திய அரசு, தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் மத்திய அரசு முடக்கி விட்டது. இதைக் கண்டித்து, திமுக

கூட்டணி கட்சிகள் சாா்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதற்கு திமுக மாவட்ட அவைத் தலைவா்கள் எம்.ஆா்.எம். பாலசுப்பிரமணியம், மா. ஒச்சுபாலு, நாகராஜன் ஆகியோா் தலைமை வகிப்பா். இதில் திமுக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com