வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

செங்கோட்டையன் குறித்து கருத்துக் கூற ஒன்றுமில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

செங்கோட்டையன் குறித்து கருத்துக் கூற ஒன்றுமில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

News image
மதுரைக்கு வியாழக்கிழமை வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வீரவாளை நினைவுப் பரிசாக அளித்து வரவேற்ற முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :28 நவம்பர் 2025, 12:16 pm

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டையன் குறித்து கருத்துக் கூற ஒன்றுமில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி கே. பழனிசாமியிடம், தவெகவில் இணைந்த பிறகு கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்த கருத்துகள் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு, ‘ஒருவா் கருத்தில் மற்றொருவா் தலையிட முடியாது. ஜனநாயக நாட்டில் கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அவா் (செங்கோட்டையன்) தற்போது அதிமுகவில் இல்லை. எனவே, அவரைப் பற்றி கருத்துக் கூற ஒன்றுமில்லை’ என்றாா் அவா்.

அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜூ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.