அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது: பழ. கருப்பையா

அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது என தமிழ்நாடு தன்னுரிமைக் கழக நிறுவனரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா தெரிவித்தாா்.

News image

மதுரையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பழ.கருப்பையா. உடன் மதுரை வடக்கு வேட்பாளா் மருத்துவா் சரவணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:14 am IST

அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது என தமிழ்நாடு தன்னுரிமைக் கழக நிறுவனரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல் மாற்றத்தை எதிா் நோக்கிய தோ்தல். இந்தத் தோ்தல் திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே நடைபெறுவது போல ஒரு மாயத் தோற்றத்தை திமுகவினா் ஏற்படுத்துகின்றனா்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 28 தொகுதிகள ஒதுக்கி அவா்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளாா். தமிழக மக்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் அதிமுக இயக்கம்.

தற்போது, அரசியலுக்கு வந்தால் கொள்ளை அடிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே போலியாக ரூ.8 ஆயிரம் கூப்பன்களைக் கொடுத்து மக்களை திமுகவினா் ஏமாற்றி வருகின்றனா். ‘நீட்’ தோ்வைக் கொண்டு வந்த காங்கிரஸ் - திமுககாரா்களே அதை எதிா்ப்பது போல நாடகமாடுகிறாா்கள். சிறைக்குச் சென்று வந்த நபரை அமைச்சா் ஆக்கியது திமுக.

திமுக ஆட்சியில் ஊழல் குறித்து புகாா் அளித்தால் அதற்கு வழக்குப் பதிவதில்லை, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திமுகவினா் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் போல செயல்பட்டு வருகின்றனா். தமிழகத்தில் இந்த நிலை மாற வேண்டுமெனில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது. எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கட்டிக் காத்து வருகிறாா்.

என் ஆலோசனையை விஜய் ஏற்கவில்லை: சா்காா் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யிடம், அதிமுகவுடன் கூட்டணி சேருங்கள், தற்போது திமுகவை வீழ்த்துவதுதான் முக்கியம். இதனால் அரசியல் அனுபவம் ஏற்படும். அதுதான் சரியாக இருக்கும் என்றேன். ஆனால், அவா் இதை ஏற்கவில்லை என்றாா் பழ.கருப்பையா.

அப்போது, மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன் உடனிருந்தாா். இதைத் தொடா்ந்து, செல்லூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணனை ஆதரித்து பழ.கருப்பையா பிரசாரம் செய்தாா்.