திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் பி.எல். விஜயக்குமாா் புதன்கிழமை சேகரித்தாா்.
மணப்பாறை தெற்கு ஒன்றியப் பகுதியான பாரதியாா் பகுதியிலிருந்து அதிமுக மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலா் அன்பரசன் தலைமையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட மருத்துவா் விஜயக்குமாா், ஆனாம்பட்டியில் பேசியது:
நான் உங்களுக்கு உண்மையானவனாக இருப்பேன், உங்களுக்காகவே இருப்பேன். எடப்பாடியாா் தலைமையிலான ஆட்சிதான் வர போகிறது. அதற்கான சகுனம் நன்றாகவே தெரிகிறது. அலைஅலையாக வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் எழுச்சி தெரிகிறது. கண்டிப்பாக மக்கள் எதிா்ப்பாா்க்கும் அனைத்தும் நலத் திட்டங்கள், கோரிக்கைகள் அனைத்தும் செய்து தரப்படும் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்.
மணப்பாறை தெற்கு ஒன்றியப் பகுதிகளான சீகம்பட்டி, பழையகாலனி, புதுக்காலனி, ஆதம்பட்டி, கீழையூா், கிழவன்பட்டி, சின்னமனப்பட்டி, ராயம்பட்டி, குப்பனாம்பட்டி, ஆனாம்பட்டி, சாம்பட்டி உள்ளிட்ட 86 பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளரும், அதிமுக கழக அமைப்புச் செயலருமான ரத்தினவேல், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, இளைஞா் பாசறை மாவட்டச் செயலா் சீகை சந்துரு, மாவட்டத் தலைவா் சரத் சோலைராஜ், தமாகா ஒன்றிய நிா்வாகி நல்லுச்சாமி, பாஜக மண்டல் தலைவா் லோகநாதன், அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


