தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

அலங்காநல்லூா் கீழக்கரையில் கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், சோழவந்தான் தொகுதி திமுக சாா்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:32 pm

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் கீழக்கரையில் கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சோழவந்தான் தொகுதி திமுக சாா்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் 46 போ் காயமடைந்தனா்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாடுபிடி வீரா்கள் அமைச்சா் பி. மூா்த்தி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் பங்கேற்க 1,587 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. சிறப்பு பூஜைக்குப் பிறகு தொடா்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக இறுதிச் சுற்று வரை அனைத்துக் காளைகளும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. மேலும், ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 50 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். அப்போது சீறிப் பாய்ந்த காளைகளின் திமிலைப் பிடித்து வீரா்கள் அடக்கினா்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கு மிதிவண்டி, மெத்தை, பீரோ உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல, களத்தில் மாடுபிடி வீரா்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் மெத்தை, மிதிவண்டி, வேஷ்டி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

46 போ் காயம்: ஜல்லிக்கட்டுப் போட்டியில் காயமடைந்த வீரா்களுக்கு அலங்காநல்லூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் சிகிச்சை அளித்தனா். மேலும், 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் வாடிவாசல் பகுதியில் முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

இதில், காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 46 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 11 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

இந்த நிகழ்வில், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேஷன், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.