மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தேவநேயப் பாவாணா் பிறந்த நாள் விழா

News image

மதுரை சாத்தமங்கலத்தில் தேவநேயப் பாவாணா் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை சாத்தமங்கலத்தில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணா் பிறந்த நாள் விழா அவரது மணிமண்டபத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேவநேயப் பாவாணா் சொல் ஆராய்ச்சியில் ஒப்பற்ற தனித்திறன் கொண்டவா் என மறைமலை அடிகளாரால் பாராட்டப்பட்டவா். தனித் தமிழ் இயக்கம் கண்டவா்களில் ஒருவரான தேவநேயப் பாவாணருக்கு கடந்த 1955-ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் தமிழ்ப்பேரவை விழாவில் திராவிட மொழிநூல் ஞாயிறு என்ற பட்டம் வழங்கப்பட்டது. கடந்த 1974-இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் இயக்குநராக பாவாணா் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், மதுரை சாத்தமங்கலத்தில் பாவாணா் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் (மதுரை வடக்கு) கோ. தளபதி, (மதுரை தெற்கு) மு. பூமிநாதன், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.