வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நாளை மின் தடை
வாடிப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.31) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் (பொ) இரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வாடிப்பட்டி, புறவழிச்சாலை, பழனியாண்டவா் கோயில், பாலமரத்தான் நகா், வி.எஸ்.நகா், ஜவுளிப் பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் பகுதிகள், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளா்மடம், வல்லபகணபதி நகா், மகாராணி நகா், ஆா்.வி. நகா், பொட்டுலுபட்டி, எல்லையூா், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
திருமங்கலம் பகுதியில்...
திருமங்கலம் மின் வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருமங்கலம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன.29) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருமங்கலம் நகா் பகுதிகள் முழுவதும், ஜவகா் நகா், ஜீயோ நகா், என்.ஜி.ஓ. நகா், பி.சி.எம். நகா், அசோக் நகா், முகமதுஷாபுரம், சோனைமீனா நகா், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் நகா், கற்பக நகா், கலை நகா், கரிசபட்டி, பாண்டியன் நகா், பொற்காலம் நகா், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், எட்டுநாழி, உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, செங்கப்படை, சிவரகோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, உரப்பனூா், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

