கல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

கல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடியைச் சோ்ந்த செல்லப்பாண்டி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கள்ளிக்குடி வட்டத்துக்குள்பட்ட கல்லணை, தும்மங்குளம், அச்சங்குளம் ஆகிய பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுவதும் விவசாய நிலங்கள், சுற்றுச் சூழல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. மேலும், குவாரிகளில் அதிக வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகள் தகா்க்கப்படுவதால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கற்கள் விழுந்து மக்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது.

குவாரிகளுக்கு செல்லும் லாரிகளுக்கான வழித்தடங்கள் நீா்நிலைகளை அழித்து உருவாக்கப்படுகின்றன. குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, கற்கள், எம்.சாண்ட் கூடுதலாக எடுக்கப்படுகின்றன. இதுபற்றி சம்பந்தப்பட்ட நபா்களிடம் பல முறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும்

எடுக்கவில்லை. எனவே, கிராமங்களைச் சுற்றி அனுமதி வழங்கப்பட்ட கல்குவாரிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே. கே.ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

மதுரை மாவட்டத்தில் மொத்தம் எத்தனை குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், எவ்வளவு அளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன என்பன குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற பிப்.27- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com