மதுரை மாவட்டம், மேலூரில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
மேலூா்-சிவகங்கை சாலையில் கட்டி முடிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைச்சா் பெ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
இதில் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் நூா்முகமது, மேலூா் தொகுதி பொறுப்பாளா் கே.வி.வி. ரவிச்சந்திரன், தவெக மாவட்டச் செயலா் விஷால் கிருஷ்ணா, மேலூா் தவெக நகா் செயலா் பிரசாந்த்,
மதுரை வடக்கு மாவட்ட செயலா் வீரசேகரன், கொட்டாம்பட்டி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திலகராஜ், மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராஜ் பிரதாபன், நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










